சவுதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுப்பு - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுப்பு

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவர் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பூரணமாக குணமடைவர் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

சுமார் 9 மணித்தியால அறுவைச் சிகிச்சையின் பின்னரே குழந்தைகள் இருவரும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சிக்கலான குறித்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழாமில் சவுதியின் முன்னாள் சுகாதார அமைச்சரான மருத்துவர் அப்துல்லா அல்- ரபீயாவும் அடங்குகின்ற னர்.

 

அப்துல்லா மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய இரு இரட்டையர்களுமே ரியாத்தில் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இரு குழந்தைகளும் பொதுவான உறுப்புகள் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் 9 மணித்தியாலம் நடைபெற்ற 9 கட்ட அறுவைச் சிகிச்சையின் பின்னர் பிரித்தெடுத்துள்ளனர்.

 

ஆரம்பத்தில் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 60 அல்லது 70 வீதமேயென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது இருவரது உடல் நிலையும் எதிர்பார்ததை விட சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1990 ஆம் ஆண்டு முதல் சவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிக்கும் 35 அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sa1 sa1.jpg2

Web Design by Srilanka Muslims Web Team