சவுதி அரேபியாவில் புலியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுமி (video) - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் புலியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுமி (video)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிககார்


சவுதி அரேபியாவில் பரபரப்பான மார்கெட் பகுதியில் நபர் ஒருவர் தமது வளர்ப்பு புலியை அழைத்து வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய நடைபாதை வழியாக புலியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த பாதை வழியாக 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தமது குடும்பத்தினருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதுவரை தமது உரிமையாளருடன் மெதுவாக மிகவும் சாதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த புலியானது திடீரென்று குறித்த சிறுமியின் மீது பாய்ந்து கடிக்க முயற்சித்தது.

இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகள் எதுவும் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கடைபிடிக்க தவறியது ஏன் என்ற கேள்வியை பொதுமக்களில் பலரும் எழுப்பியுள்ளனர்.

(video)

Web Design by Srilanka Muslims Web Team