சவுதி அரேபியாவில் 2016 ஆம் ஆண்டில்153 பேருக்கு மரண தண்டனை - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் 2016 ஆம் ஆண்டில்153 பேருக்கு மரண தண்டனை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சவுதி அரேபியாவில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதில் கடந்தாண்டு மட்டும் சர்வதேச மன்னிப்பு சபை தகவலின் படி 153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் 158 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்தாண்டு குறைவுதான் என்று கூறப்படுகிறது. இதில் 47 பேர் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் பயங்கரவாத குற்றங்களுக்காக சாகடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போதை மருந்து கடத்துதல் மற்றும் கொலை போன்ற வழக்குகளிலே அதிகமானோர் மரணதண்டனைக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு மரணதண்டனைகள் ஒரு வாள் கொண்டு குற்றவாளியின் தலையை துண்டாக வெட்டி நிறைவேற்றப்படுகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team