சவுதி அரேபியாவில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக ஒரு  மதகுரு உள்பட 47 கைதிககளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட காரணங்களுக்காக ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு மதகுரு உள்பட 47 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்ட இந்த கைதிகள், கடந்த 2003 முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் ஈடுப்பட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team