சவுதி அரேபியா தம்மாமில் இலங்கை வாழ் சகோதரர்கள் ஒன்றுகூடல் - Sri Lanka Muslim

சவுதி அரேபியா தம்மாமில் இலங்கை வாழ் சகோதரர்கள் ஒன்றுகூடல்

Contributors
author image

Junaid M. Fahath

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான தம்மாம், கொபார் பிரதேசத்தில்
வேலை நிமித்தம்
காரணமாக வசித்துவரும்
எமது இலங்கை வாழ் மக்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து,
சகலருக்கும் நன்மை பயக்கும் விடங்களை முன்னெடுக்கும் முகமாக கடந்த ஞாயிறு
07/02/2015 அன்று ஒரு Sri Lankan Business Forum – Dammam
உருவாக்கப்பட்டது.

 

அதன் ஆரம்ப
ஒன்று கூடல் நிகழ்வில் சவுதிக்கான
இலங்கை தூதரகர் அல்-ஹாஜ் ஹுசைன் முஹமட் மற்றும் பலர்
கலந்து கொண்டு இங்கு வாழும் மக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுக்
கொள்வது பற்றி விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

 

அதல் முக்கிய விடயமாக தூதரக பாடசாலை ஒன்றின் தேவை பற்றி பலர் தூதரகர் முன்
பேசினார்கள், அவரும்
இங்கு பாடசாலை ஒன்றின்
முக்கியத்துவத்தை தானும்
உணர்ந்துள்ளேன் என ஒரு விரிவான
உரை ஒன்றை நிகழ்ந்த்தினார்.

 

இதன் அடிப்படையில், எங்கள்
பிரதேசமான தம்மாம், கொபார், ரஸ்தனூரா, மற்றும் ஜுபையில் போன்ற பகுதிகளில்
எங்களது செயற்பாடுகளை விரிவாக்குவதற்கு ஆக்க பூர்வமான ஆலோசனைகள் இடம்
பெற்று வருகின்றன.

 

இதற்காக முக்கியமான தனிநபர்கள்,
சிறு குழுக்கள் என்று சந்திப்புக்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
திறமைசாலிகளை உள்வாங்கி அவர்களை Sri Lankan Business Forum – Dammam என்ற
குடையின் கீழ் ஒன்றிணைப்பதன் மூலம்
ஒரு ஆரோக்கியமான தளம் அமைத்து அதன் ஊடாக எம்மக்களது முழுத்தேவைகளையும்
அடைந்து கொள்ள வழி செய்தல்.

 

அத்துடன் எமது கிழக்கு பிராந்தியத்தின் பெற்றோருடன் வாழும் சுமார் 600
குழந்தைகள் பயன்பெறும் வகையில் இலங்கை தூதரக பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான
முயற்ச்சிகளை முன்னெடுப்பதற்கு ஒரு
பிரத்தியேக செயற்திறனுள்ள
ஒரு குழு நியமிக்கப்படவுள்ளது.

 

இக்குழு சவுதிவாழ் இலங்கை சகல
இனத்தவர்களின் பிரதிநிதிகள்
கொண்டதாக இருக்கும்.

 

நீங்களோ அல்லது உங்களுக்கு
தெரிந்தவர்கள் இப்பிரதேசத்தில்
வாசிப்பவராக இருந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை தெரியப்படுத்துவதுடன்
முடியுமானவரை எங்களுடைய
முயற்சிக்கு உதவ முன்வாருங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team