சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தின் விஷேட பயான் நிகழ்சி - Sri Lanka Muslim

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தின் விஷேட பயான் நிகழ்சி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் யாசிர் பிர்தவ்ஸி அவர்கள் “கணவனின் கடமைகள், உரிமைகள்” எனும் தலைப்பில் மிகச் சிறந்த முறையில் உரை நிகழ்தினார். அல்லாஹ் அவரின் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!

ஆண்கள், பெண்கள், சிறுவார்கள் என கிட்டத்தட்ட 90 பேர் வரை கலந்து கொண்டு பிரயோசனமடைந்தனர். பயான் முடிவில் பேசப்பட்ட தலைப்பில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. ஈட்ரில் நிகழ்சிகள் இராப்போசனத்துடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த மற்றும் அனைத்து வகைகளிலும் எமக்கு உதவிய அனைத்து சகோதரர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

ba2.jpg3.jpg4 ba2.jpg3  ba

Web Design by Srilanka Muslims Web Team