சவுதி: சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிரான தேடுதல் ஆரம்பம் - Sri Lanka Muslim

சவுதி: சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிரான தேடுதல் ஆரம்பம்

Contributors

சட்டவிரோத வெளிநாட்டுப் பணியாளர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களையும் தேடும் நடவடிக்கையை நாடெங்கும் பாதுகாப்புப் படையினர் இன்று ஆரம்பிக்கவிருப்பதாக சவுதி அரசாங்கம் கூறியுள்ளது.

புதிய வேலைவாய்ப்புச் சட்டம் ஒன்று வந்ததை அடுத்து அமலுக்கு வந்த ஒரு வெளிநாட்டு பணியாளர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

பெரும்பாலும் ஆசியர்கள் உட்பட 80 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்கள் சவுதியில் இருக்கிறார்கள்.

எண்ணெய் வளம் மிக்க தமது நாடு, வெளிநாட்டுப் பணியாளர்களில் தங்கியிருப்பததை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன.

அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ள இந்த வளைகுடா நாடு, அதேவேளை, தமது உள்நாட்டவர்கள் மத்தியில் அதிகமான வேலையில்லாத் திண்டாட்ட வீதத்தையும் கொண்டுள்ளது.bbc

Web Design by Srilanka Muslims Web Team