சவுதி தலைமையில் சர்வதேச கூட்டணி - Sri Lanka Muslim
Contributors
author image

BBC

யெமெனில் ஷியா ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான அரபுநாடுகள் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இரான் கோரியுள்ளது.ஏடன் நகரை ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் தாக்கிவருகின்றனர்.

 

ஹுத்தி இராணுவ நிலைகளைத் தாக்கியுள்ள விமானத் தாக்குதல்களை படையெடுப்பு நடவடிக்கை என்றும் அது யேமனின் நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடிய அபாயகரமான நடவடிக்கை என்றும் இரானின் வெளியுறவு அமைச்சு வர்ணித்துள்ளது.

 

யேமன் அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹாதி தஞ்சம் புகுந்துள்ள ஏதென் தெற்கு நகரை ஹுத்திக்கள் நெருங்கிவருகின்ற நிலையில் சவுதி இந்த விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

 

அவர் அந்த நகரில் தொடர்ந்தும் இல்லை என்றே நம்பப்படுகின்றது.
ஹுத்திக்களுக்கு இரான் ஆதரவு வழங்கிவருவதாக சவுதியும் மற்ற அரபு வளைகுடா நாடுகளும் நீண்டகாலமாக குற்றம்சாட்டிவருகின்றன.

 

ஹுத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தப்படுவதற்கு அரேபு லீக் நாடுகள் தமது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளன.

 
வளைகுடாப் பகுதி அரபு நாடுகள் மற்றும் எகிப்து உள்ளிட்ட பத்து நாடுகளின் கூட்டணியை இதற்கென ஒருங்கிணைத்துள்ளதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

 

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உதவ நான்கு எகிப்திய போர் கப்பல்கள் ஏடன் வளைகுடாவிற்கு சென்றுக்கொண்டிருக்கின்றன.

 

இந்த கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி, அந்த பிராந்தியத்தில் உள்ள அமைதிக்கு கேடு விளைவிக்கு நடவடிக்கைகளை கைவிடுமாறு, ஹுத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கும் அவர்களது வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

சௌதி ராணுவத்தின் இந்த முயற்சி, ஒரு பெரிய போரை தூண்டிவிடும் என்று ஹுத்தி கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team