சவுதி மன்னரின் அதிரடி உத்தரவு: சந்தோச வெள்ளத்தில் தொழிலாளிகள் - Sri Lanka Muslim

சவுதி மன்னரின் அதிரடி உத்தரவு: சந்தோச வெள்ளத்தில் தொழிலாளிகள்

Contributors
author image

Editorial Team

இதுதான் இஸ்லாம்….!!


சவூதி அரேபியாவில் சில தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மன்னர் சல்மான் இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு நிறுவனங்கள் திணற தொடங்கியது.

இதற்கிடையில் சவூதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞரான அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உழைப்பவனின் வியர்வை உலர்வதற்குள் அதற்கான கூலியை கொடுத்து விட வேண்டும் என்று கூறியுள்ள எச்சரிக்கையை மேற்கோள் காட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள உத்தரவில்….

வேலையின்றி சொந்த நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்க 100 மில்லியன் ரியால்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த தொகைகளை நிறுவனங்களிடமிருந்து அரசு மீண்டும் வசூலிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

உலகில் சொந்த நாட்டு மக்களையே கவனிக்காத உலக நாடுகளுக்கு மத்தியில் பிற நாட்டு தொழிலாளர்கள் விசயத்தில் கூட மன்னர் சல்மான் அவர்களே நேரடியாக கவனம் செலுத்தி உத்தரவு பிறப்பிக்கிறார். தொழிலாளர்கள் மீது தலைமை மார்க்க அறிஞர் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை மேற்கோள் காட்டி எச்சரிக்கை விடுக்கிறார்.

இதுதான் இஸ்லாம், இது தான் இறைத்தூதர் முஹம்மத் நபி அவர்கள் காட்டிதந்த வழிமுறையாகும். (MMM)

Web Design by Srilanka Muslims Web Team