சவுதி வுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் தொழில் வாய்ப்பை இழக்க போகும் வெளிநாட்டு சாரதிகள் - Sri Lanka Muslim

சவுதி வுதி அரேபிய இளவரசரின் அறிவிப்பால் தொழில் வாய்ப்பை இழக்க போகும் வெளிநாட்டு சாரதிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட சட்டப்பூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல், வங்கி கணக்குகள் தொடங்குவது, கல்வி கற்பது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அந்நாட்டு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசரான அல்வலீட் பின் தலால் டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது என்பது மிக அவசியமான தேவை’ என தலைப்பிட்டு இளவரசர் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.அதில், ‘பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதி மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது என்பது சமூக அந்தஸ்த்தை உயர்த்திகொள்வதற்காக இல்லாமல் அது ஒரு அவசிய தேவையாக தற்போது மாறியுள்ளது.

மேலும், பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதி அளிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ எனவும் இளவரசர் அதில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசக் குடும்பத்தில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் இளவரசர் வெளியிட்டுள்ள இக்கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team