சவூ­தியில் ஐந்து வயது சிறு­மிக்கு 70 தட­வைகள் சத்­திர சிகிச்சை - Sri Lanka Muslim

சவூ­தியில் ஐந்து வயது சிறு­மிக்கு 70 தட­வைகள் சத்­திர சிகிச்சை

Contributors
author image

Editorial Team

சவூதி அரே­பி­யாவில் ஐந்து வயதுச் சிறுமி ஒரு­வ­ருக்கு மூன்று வரு­டங்­க­ளுக்குள் 70 க்கும் மேற்­பட்ட சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆனால் அவ­ரது உடல் நிலையில் எவ்­வித முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை எனவும் அச் சிறு­மியின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

இதனால் உரிய மருத்­துவ சிகிச்­சை­யினை வெளி­நாட்டில் பெற்­றுக்­கொள்ள உத­வு­மாறு சம்­பந்­தப்­பட்ட சவூதி அதி­கா­ரி­க­ளிடம் அச் சிறு­மியின் தந்­தை­யான ஹுஸைன் அல்-­கிதைஷ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

தனது மகள் இரண்டு வய­தாக இருக்­கும்­போது எரியும் தன்மை கொண்ட பொரு­ளொன்றை விழுங்­கி­ய­தா­கவும் அதன் கார­ண­மாக தனது மகளின் உண­வுக்­குழாய் மற்றும் வயிற்றுப் பகு­தியில் பார­தூ­ர­மான எரி­கா­யங்கள் ஏற்­பட்­ட­தா­கவும் ஹுஸைன் அல் கிதைஷ் தெரி­வித்­த­தாக அல் வதான் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

விழுங்­கிய பொருள் என்­ன­வென்று குறிப்­பாக அவர் தெரி­விக்­க­வில்லை. ஆனால் சம்­பவம் நடை­பெற்­ற­தி­லி­ருந்து தனது மகள் சாதா­ரண நிலைக்குத் திரும்­ப­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

தனது மகளால் எதுவும் சாப்­பி­டவும் முடி­யாது, குடிக்­கவும் முடி­யாது. அவ­ருக்கு மூக்கு வழி­யாகப் பொருத்­தப்­பட்­டுள்ள குழாய் மூல­மா­கவே உண­வ­ளிக்­கப்­ப­டு­கி­றது எனவும் அல் கிதைஷ் தெரி­வித்தார்.

எனது மகள் ஷஹாத் முதலில் அல்-­கொ­பாரில் அமைந்­துள்ள சாத் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். அங்கு இரண்டு வாரங்­க­ளாக செயற்கைச் சுவாசம் அளிக்­கப்­பட்­டது. பின்னர் அதே நக­ரத்­தி­லுள்ள போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார். அதன் பின்னர் றியா­தி­லுள்ள மன்னர் பஹத் மருத்­துவ நக­ருக்கு கொண்டு செல்­லப்­பட்டார். அங்கு உண­வுக்­குழாய் மற்றும் வயிற்றுப் பகு­தியை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக இரு வாரங்­க­ளுக்கு ஒரு தடவை எண்­டொஸ்­கோபிக் முறை­யி­லான சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

உண­வுக்­கான குழா­யொன்று அவ­ரது வயிற்றில் பொருத்­தப்­பட்­டது. இரண்­டரை வரு­டங்­க­ளாக எவ்­வித முன்­னேற்­றமும் இன்றி அதே நிலை­யில்தான் இருக்­கின்றார். என அல்-­கிதைஷ் கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான எண்­டொஸ்­கோபிக் முறை­யி­லான சத்­திர சிகிச்­சை­யின்­போது உண­வுக்­குழாய் பகுதி சிறு பகு­திகள் வெட்டி எடுக்­கப்­ப­டும்­போது நிலைமை மேலும் மோச­ம­டை­கின்­றது.

றியா­தி­லுள்ள மன்னர் பஹத் மருத்­து­வ­ம­னையில் மாத்­திரம் எனது மக­ளுக்கு விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான சுமார் 50 சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என அல்-­கிதைஷ் தெரி­வித்தார்.

அதன் பின்னர் எனது மகள் றியா­தி­லுள்ள மன்னர் காலித் பல்­க­லைக்­க­ழக வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு அங்கும் பல்­வேறு உண­வுக்­குழாய் மற்றும் வயிற்றுப் பகுதி மேம்­பாட்­டுக்­கான சத்­திர சிகிச்­சைகள் நடைபெற்றன. ஆனால் எந்தவிதமான சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை.

நாளுக்கு நாள் எனது மகளின் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகின்றது. அரசாங்க செலவில் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அத் தந்தை மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(நன்றி விடிவெள்ளி)

Web Design by Srilanka Muslims Web Team