சவூ­தியில் பாகிஸ்­தா­னி­ய­ருக்கு தலையை வெட்டி மர­ண­தண்­டனை - Sri Lanka Muslim

சவூ­தியில் பாகிஸ்­தா­னி­ய­ருக்கு தலையை வெட்டி மர­ண­தண்­டனை

Contributors

சவூதி அரே­பி­யா­வா­னது போதைவஸ்தை கடத்தி வந்த குற்­றச்­சாட்­டில் பாகிஸ்­தா­னி­யர் ஒருவ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தலையை வெட்டி மரண­­தண்­டனை நிறை­வேற்றியுள்­ளது.

பெரு­ம­ளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரே­பி­யா­வுக்கு கடத்த முயன்­ற­தாக அந் நபர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.
அவ­ருக்கு கிழக்கு நக­ரான டம்­மாமில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.
அவ­ரது மர­ண­­தண்­டனை நிறை­வே­ற்­றத்­துடன் சவூதி அரே­பி­யாவில் இந்த வருடம் மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்டவர்கள் தொகை 72 ஆக உயர்ந்­­துள்­ளது.

Web Design by Srilanka Muslims Web Team