சவூதியின் முடிக்குரிய இளவரசராக நயீப். - Sri Lanka Muslim
Contributors
author image

Junaid M. Fahath

சவுதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான், தனது அமைச்சரவையை
பெருமளவில் மாற்றி அமைத்துள்ளார் அத்துடன் பட்டத்திற்கான புதிய
வாரிசுகளையும் அவர் அறிவித்துள்ளார்.  இதனடிப்படையில்
சல்மானின் சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய
பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

தற்போதைய அரசரின் மகனான மொஹம்மது பின் சல்மான், பட்டத்து இளரசருக்கு
அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதியின்
அரசராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து தற்போதைய
அரசரான சல்மான் ஜனவரி மாதத்தில் அரசராக முடிசூட்டப்பட்டார்.

 

முந்தைய அரசரான அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 2005ஆம் ஆண்டிலிருந்து அரசராக இருந்துவந்தார்.தற்போதைய அரசரான சல்மான் முந்தைய நிலையிலிருந்து சில மாற்றங்களைச்
செய்துவருகிறார்.பட்டத்து இளவரசராக இருந்த மோக்ரின் பின் அப்துல் அஜீஸ்
உள்பட முந்தைய அரசருக்கு நெருக்கமானவர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

 

நயீஃப் ஏற்கனவே அமெரிக்காவுடன் நல்ல உறவுகளை பேணிவந்தவர் என்பதால், அவர்
இளவரசராக அறிவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கும். சவூதியின்
பாதுகாப்புத் துறைத் தலைவரான அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக
கடும் போக்கைக் கடைப்பிடித்துவந்தார்.

 

2009ஆம் ஆண்டில் அல் – காய்தா அவரைக் கொல்ல முயற்சித்தது. பட்டத்து இளவரசருக்கு அடுத்த
நிலையில் நியமிக்கப்பட்டிருக்கும் முகமது பின் சல்மான், அரச குடும்ப
வரிசையில் தொடர்ந்து மேலேறிவருகிறார்.ஜனவரி மாதத்தில்
அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏமனில் சவூதி
தலைமையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை அவர்தான் தற்போது
மேற்பார்வையிட்டுவருகிறார்.

 

1975ஆம் ஆண்டிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சௌத் எல் ஃபைசல், அந்தப்
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சவூதியின் அமெரிக்கத் தூதர் அடெல்
ஜுபெய்ர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் அரச குடும்பத்தைச் சேராதவர். தங்களுடைய பிராந்தியத்தில் முக்கிய
போட்டி நாடான ஈரானைப் பின்னுக்குத்தள்ளும் வகையில்
வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்களில் உறுதியான
நிலைப்பாடுகளை சல்மான் மேற்கொண்டுவருகிறார்.
நன்றி -சர்வதேச செய்திகள்

Web Design by Srilanka Muslims Web Team