சவூதியில் பணியாற்றும் இலங்கை பெண்களிடம் இருந்து நாளொன்றுக்கு 03 முறைப்பாடுகள் - Sri Lanka Muslim

சவூதியில் பணியாற்றும் இலங்கை பெண்களிடம் இருந்து நாளொன்றுக்கு 03 முறைப்பாடுகள்

Contributors

சவூதியில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு மூன்று முறைப்பாடுகளாவது பதிவு செய்யப்படுவதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அரப் நியூஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் தமது எஜமானர்களால் சம்பளங்கள் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களே அதிகம் என்று சவூதியின் தூதரக அதிகரி எம்.பி.எம் சரூக் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 பணிப்பெண்கள் தாம் பணியாற்றும் வீடுகளில் இருந்து தப்பி வந்து தூதரகத்தில் அடைக்கலம் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதியில் தற்போது 350, 000 இலங்கை பணியாளர்கள் பணியாற்றுக்கின்றனர். இவர்களில் 80 வீதமானோர் பணிப்பெண்களாவர்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team