சவூதியில் தடையை மீறி கார் ஓட்டிய இளம்பெண் விபத்தில் மரணம் - Sri Lanka Muslim

சவூதியில் தடையை மீறி கார் ஓட்டிய இளம்பெண் விபத்தில் மரணம்

Contributors

-ரியாத்-

சவூதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிச் சென்ற பெண் விபத்தில் சிக்கி இறந்தார்.

 

ரியாத்தில் இன்று சுமார் 20 வயதான அந்த இளம்பெண், தடையை மீறி தனது வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு சுவரில் மோதி தீப்பிடித்தது. இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

 

உலகிலேயே தீவிர பழமைவாத நாடான சவுதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையை மீறி நகருக்கு வெளியில் பாலைவனப் பகுதிகளில் பெண்கள் வாகனம் ஓட்டுகின்றனர். இவ்வாறு ஓட்டும்போது சில சமயம் விபத்து ஏற்படுகிறது.

 

இந்த தடையை எதிர்த்து மகளிர் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதுடன், ஆன்லைனில் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team