சவூதி அரேபியாவில் இனி வருமான வரி கிடையாது : சவூதி அரசு அறிவிப்பு.....!! - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் இனி வருமான வரி கிடையாது : சவூதி அரசு அறிவிப்பு…..!!

Contributors
author image

Editorial Team

உலக நாடுகளில் பொருளாதார ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கும் நாடு சவூதி அரேபியா.

2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கச்சா எண்ணெய் வீழ்ச்சியின் காரணமாக சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி சில சலுகைகளில் கெடுபிடி காட்டியது சவூதி அரசு.

இந்நிலையில் சவூதி அரேபிய அரசு நாட்டு மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் நிதியமைச்சர் முஹம்மது அல் ஜதான் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்…

சவூதி அரேபியாவை சேர்ந்த மக்களுக்கு தனி நபர் வருமான வரியும், நிறுவனங்களுக்கான வருமான வரியும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team