சவூதி அரேபியாவில் உள்ள, இலங்கை தூதரகம் குறித்து முறைப்பாடு - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் உள்ள, இலங்கை தூதரகம் குறித்து முறைப்பாடு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-ஜித்தாவிலிருந்து ரஸ்மி-

 

சவுதி அரேபியா ஜித்தாஹ்வில் உள்ள இலங்கை தூதரகம் ஒரு சில குடும்பங்களுக்கே தூதரகமாக செயற்பட்டு வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது… ஜித்தாவில் உயர்பதவி வகிக்கும் சில இலங்கையர்களுக்கு மட்டுமே இந்த தூதரகம் செயல்படுகிறது இதனால் சாதரண தரத்தில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு இவர்கள் முன்னுரிமை வழங்குவதில்லை.

 

ஜெட்டாவில் உள்ள தூதுவருக்கும் அவருடைய நட்பு வட்டாரங்களுக்குமே அங்கு நடை பெரும் சகல நிகழ்வுகளுக்கும் அழைக்கப்படுகின்றனர் குறிப்பாக சுதந்திர தினம், வெசாக், புத்தாண்டு இன்னும் பல இது ஒரு பக்க சார்பாகும்.

 

இவ்வாறான ஒரு சூழலை தடுப்பதுக்கு எல்லா ஜெட்டாஹ் வாழ் இலங்கை சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு குழுத்தலைவரை நியமித்து இதன் மூலம் ஜெட்டாவில் வாழும் எல்லா இலங்கையரையும் அனுசரித்து செல்லவேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

 

அத்தோடு தற்போது தற்போது ஜெட்டாஹ் வாழ் இலங்கை சமுகத்தை பிரதிநிதிபடுத்துவோர் என கூறிக்கொள்ளும் சிலர் தமக்கு வேண்டியவர்களை மட்டுமே சகல நிகழ்வுகளுக்கும் அழைப்பிதழை அனுப்புகின்றார் சாதாரண தொழிலாளர்களை இவர்கள் எந்த வகையிலும் மதிப்பதில்லை இது வன்மையாக கண்டிக்க தக்கதாகும் இதற்கு உடனடியாக தூதரகம் தலையிட்டு இவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறாமல் இருப்பதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team