சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆறாயிரம் இலங்கையர் விரைவில் நாடு திரும்புவர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆறாயிரம் இலங்கையர் விரைவில் நாடு திரும்புவர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

Contributors

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 10 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்களில்
6 ஆயிரம் தொழிலாளர்கள் விரைவில் நாடு திரும்புவர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது .
சவூதி அரேபியாவில் தொழில் புரிவதற்கான உரிய விசா மற்றும் ஆவணங்களின்றி 10 , 000 இலங்கைத் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக அந்நாட்டில் தங்கியுள்ளனர் .
சவூதி அரேவியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது .
இதனைக் கருத்திற் கொண்டு நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏறக்குறைய 6,000 இலங்கையரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது .
இதேவேளை , சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட பொது மன்னிப்புக் காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறாதவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது . இதன் பிரகாரம் நாட்டைவிட்டு வெளியேறாமல் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் 2 வருட சிறைத்தண்டனையை அல்லது ஒரு இலட்சம் சவூதி ரியாலை தண்டப்பணமாக செலுத்த நேரிடுமென சவூதி அரசாங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team