சவூதி அரேபியாவில் நடைபெற்ற ‘ஸ்கைப்’ திருமணம் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ‘ஸ்கைப்’ திருமணம்

Contributors
author image

World News Editorial Team

சவூதி அரேபியாவில் முதலாவது ‘ஸ்கைப்’ திருமணம் அண்மையில் நடத்தி வைக்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

சவூதியைச் சேர்ந்தவர் அயெத் அல் சுபயீ. இவர் அமெரிக்காவில் கல்வி கற்கிறார். இவருக்கும் சவூதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குமே இந்த ஸ்கைப் ஊடான திருமணம் இடம்பெற்றுள்ளது.

 

முன்னேற்கரமான ஸ்கைப் வீடியோ தொடர்பாடல் முறைமை ஊடாக சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட முதலாவது திருமணம் இதுவென குறித்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

 

இந்ந ஸ்கைப் திருமணத்தினை மணமகன் மற்றும் மணமகள் இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகளின் வீட்டில் வைத்து ஷேக் பவாஸ் அல் நாபீ என்பவர் நடத்தி வைத்துள்ளார் என ஒகாஷ் அரபு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்த முறையில் திருமணம் நடத்த என்னைக் கேட்டபோது முதலில் நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் பின்னர் நான் ஒப்புக்கொண்டேன் ஏனெனில் இது ஷரிஆவுக்கு முரணானதாக இல்லை என ஷேக் பவாஸ் அல் நாபீ கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team