சவூதி அரேபியாவில் பாரிய தீ விபத்து - 11 பேர் பலி! - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் பாரிய தீ விபத்து – 11 பேர் பலி!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில் தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர்.

இந்தக் கொடூர விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பந்தமான விசாரணைக்கு நஜ்ரான் கவர்னர் இளவரசர் ஜுலுவி இபின் அப்துல் அஸீஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வீடு காற்றோட்டமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

s

Web Design by Srilanka Muslims Web Team