சவூதி அரேபியாவில் வாசனைத்திரவிய கம்பெனியில் வேலை செய்த வெளிநாட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் வாசனைத்திரவிய கம்பெனியில் வேலை செய்த வெளிநாட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

Contributors

வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் குறிப்பிடும் படியான முன்னேற்றத்தை எட்டிய கம்பெனி ‘அரேபியன் உத்’. இந்த கம்பெனியின் முக்கிய பொருப்புகளில் பணியாற்றும் 6 வெளிநாட்டவர்கள் தங்களின் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்டுள்ளனர்.

 

 

ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் தலைமையில் இந்த மன மாற்றம் நிகழ்ந்துள்ளது. கம்பெனியின்   செலவில் மார்க்க விளக்கங்களை ஓய்வு நேரங்களில் நிகழ்த்துவது வழக்கம். விருப்பமுள்ளவர்கள்  இதில் கலந்து கொள்ளலாம். எவரையும் கட்டாயப் படுத்துவது இல்லை.

 

இந்த தாவா நிகழ்ச்சியின் மூலம் குர்ஆனை படித்து விளங்கி தங்களின் வாழ்வியலாக இந்த ஆறு பேரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இது போன்று இதற்கு முன்னும் பல மாற்று மதத்தவர்கள் இதே கம்பெனியில் தூய இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இந்த கம்பெனியின் நிர்வாகிகள் சம்பளத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாது தனது வேலையாட்கள் சிறந்த வாழ்வியலை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மிக சிரத்தை எடுத்து பல ஆக்கபூர்வ பணிகளை செய்து வருகின்றனர்.

 

 

இஸ்லாத்தை ஏற்ற இந்த ஆறு பேரும் ‘எங்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் இவை. குர்ஆனின் அனைத்து கட்டளைகளையும் மிக சிறப்பாக பாடங்களாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு போதிக்கப்பட்டது. இந்த சிறந்த வாழ்வு கிடைத்தற்காக இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்’ என்றனர்.

 

 

இந்த கம்பெனியின் பொது மேலாளர் பந்தர் சங்கூரா கூறும்போது ‘புதிதாக தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு இணைத்துக் கொண்ட இந்த சகோதரர்களை வாழ்த்துகிறோம். இந்த மாற்றமானது இவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எங்களது நிறுவனமானது இஸ்லாமியரையும், இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைத்து ஒரு சகோதரத்துவத்தை உருவாக்குகிறோம். இஸ்லாத்தின்   சகிப்புத் தன்மை என்ன என்பதையும்   இவர்களுக்கு புரிய வைக்கிறோம்.

 

 

குர்ஆனின் கட்டளைகள் என்ன என்பதையும் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆறு பேரும் மிக சிறப்பாக விளங்கி வைத்துள்ளனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள எங்களது நிறுவனம் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருகிறது’ என்றார்.

 

 

தகவல் உதவி.   சவுதிகெஜட் 13-02-2014

சவுதி அரசு செய்து வரும் பல நல்ல திட்டங்களில் தாவா சென்டர்களும் ஒன்று. இதற்காக கோடிக்கணக்கான டாலர்களை இந்த அரசு வருடந்தோறும் செலவு செய்து வருகிறது. இரண்டு வருடம் இந்த தாவா சென்டரில் நானும் பகுதி நேரமாக சேர்ந்து இஸ்லாத்தின் சட்டங்களை கற்றுக் கொண்டேன். இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது மிக அதிகம். இதற்காக உழைத்து வரும் பல நல்ல உள்ளங்களின் எண்ணங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

 

 

‘நம்பிக்கைக் கோண்டோர் ஒட்டு மொத்தமாக புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு பகுதியினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் இதன் மூலம் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள்.’

குர்ஆன் 9:122

இந்த வசனம் கல்வி ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவு அவசியம் என்று விளக்கப்படுகிறது. மார்க்க கல்வி கற்க எல்லோரும் சென்று விடாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செல்லுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். மற்றவர்கள் உழைத்து கல்வி கற்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சொல்கிறான்.

 

 

அதன் பிறகு உழைத்தவர்கள் கல்வி கற்க செல்ல வேண்டும். இது ஒரு சுழற்சி முறையில் நடைபெற வேண்டும். முகமது நபியின் தோழர்களும் இவ்வாறு சுழற்சி முறையிலேயே முகமது நபியிடமிருந்து கல்வியைக் கற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது அதற்கும் அவசியம் இல்லாமல் இணையம் எனற மாபெரும் சக்தி ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுகிறது.

 

 

தினம் ஒரு மணி நேரம் இணையத்தில் இஸ்லாத்துக்காக ஒதுக்கினாலே போதும். சிறந்த மார்க்க அறிஞராக பரிணமிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த கல்வியை ஆறு மாதத்திலேயே கற்றுக் கொள்ளும் வண்ணமாக பாடங்கள் அமைக்கப்பட்டு பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த அமைப்பானது தொடர வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

Web Design by Srilanka Muslims Web Team