சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்களுக்கு திருமண வட்ஸ்அப் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்களுக்கு திருமண வட்ஸ்அப்

Contributors
author image

Editorial Team

சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் தொகை அதிகரித்து வருவதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வினர் திருமணப் பொருத்த வட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கி ஏற்கனவே திருணம் செய்த ஆண்களுக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கூட்டிணைந்து பலதார திருமணம் என்ற தலைப்பின் கீழ் மேற்படி வட்ஸ்அப் பக்கத்தை ஸ்தாபித்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் வாழ்க்கைத் துணை யற்று இருக்கும் பெண்களின் தொகையைக் குறைக்கும் வகையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண்கள் மத்தியில் பலதார திருமணத்தை ஊக்குவித்து வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்தப் பக்கத்தில் விவாகரத்துப் பெற்றவர்கள், கைம்பெண்கள் மற்றும் திருமணம் செய்யாதவர்கள் உட்பட சுமார் 900 பெண்கள் தமது பெயரைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்தப் பக்கத்தில் பதிவுசெய்தவர்களில் சவூதி அரேபிய பெண்கள் மட்டுமல்லாது யேமன், மொரோக்கோ, சிரியா, பலஸ்தீனம், எகிப்து, பங்களாதேஷ், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்களும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இணையத்தளப் பக்கத்தில் 18 வயது முதல் 55 வயது வரையான பெண்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team