சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

Contributors

(அரப் நியூஸ்) இப்னு ஜமால்தீன்

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வீசா இன்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் வெளியேறுவதற்காக விதிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வதற்காக ஜத்தா நகரத்திற்கு கடந்த நாட்களாக வருகை தருகின்றனர்.

இதனால் ஜித்தாவில் உள்ள பாஸ்போட் திணைக்களம் கடந்த திங்கட் கிழமை தினத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தொழிலாளர்களுக்கும் செய்வாய்க் கிழமை இந்திய தொழிலாளர்களுக்கும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வழிமுறைகளை செய்துள்ளன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் விண்ணப்பதாரர்கள் ஒரு பெரிய கூட்டம் திங்கள் காலை  மையத்தில் கூடினர். இலங்கை நாட்டவர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு  முறையான ஆவணங்கள் இல்லை என்பதனால் பொதுமன்னிப்பு தகுதிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பிக்கும் செயன்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் அத்துடன் திங்கள் இரவு 250 விண்ணப்பதாரர்கள் தங்கள் புள்ளிவிபரங்களை சமர்ப்பித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team