சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விஷேட தொழிலாளர் நீதிமன்றங்கள் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விஷேட தொழிலாளர் நீதிமன்றங்கள்

Contributors

-தமிழில் ஏ.எம் அல்பீஸ்-

சவூதி அரேபியாவில் தென்கிழக்கு ஆசிய தாபனத்தின் மூத்த அரசியல் நிபுனர்கள் வேலையாட்களின் தகராறுகளை தீர்ப்பதற்காக தனித்தனியாக அமைக்கப்படவுள்ள திட்டங்களை வரவேற்றுள்ளனர்.

இந்த நீதிமன்றங்கள் நீதியமைச்சின் கீழ் இயங்கும் என தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சில் உள்ள தற்போதைய வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுமென அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப் புதிய நீதிமன்றங்கள் தொழிளார்கள் சம்பந்தமான எல்லாவிதமான வழக்குகளையும் கையாளும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தொழிளார்களின் ஒப்பந்தங்கள் மீறுதல், ஊதியங்கள் மற்றும் இழப்பீட்டு தொகைகளின் தாமதங்கள் போன்றவை உட்பட பல விடயங்கள் இங்கு விசாரனைக்கு உட்படுத்த்தப்படும்.

தொழிலாளர் அமைச்சின் அலுவலரால் (ஒம்புட்ஸ்மேனால்) தடுக்கப்பட்ட தொழிலாளர்களின் தகராறுகள் தற்போது நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரனை செய்ய வேண்டும் என நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்

தற்போது திட்டமிடப்பட்டுள்ள தொழிலாளர் நீதிமன்றமானது சவூதி நீதித்துறையில் ஒரு மைல்கல் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். சவூதி நீதித்துறையின் இந்த முற்போக்கு நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ளனர்.

தொழிலாளர் அமைச்சு மொத்தமாக 9960 வழக்குகளை கடந்த வருடம் பெற்றுள்ளது. இவற்றுள் 4243 வழக்குகளை சவூதி தொழிலாளர்களும் 5817 வழக்குகளை வெளிநாட்டு தொழிலாளர்களும் தாக்கல் செய்துள்ளனர்

Web Design by Srilanka Muslims Web Team