சவூதி அரேபியாவில் வைத்து சென்ற ஆண்டு 4219 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!! - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் வைத்து சென்ற ஆண்டு 4219 பேர் இஸ்லாத்தை தழுவினர்….!!

Contributors
author image

Junaid M. Fahath

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….!!

 

சவூதி அரேபியாவில் சென்ற ஆண்டு 4219 பேர் இஸ்லாத்தை தழுவினர்….!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் சென்ற
ஆண்டு இறைவனின் மாபெரும்
கிருபையினால் 4219 பேர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய
இஸ்லாத்தை தங்களுடைய
வாழ்க்கை நெறியாக தழுவியுள்ளனர்.

 

அவர்களில் 1818 பேர் ஆண்கள், 2401 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும்
181 நாடுகளை சேர்ந்தவர்கள்.

 

பாலஸ்தீனத்திலிருந்து 90 சதவீத
நிலப்பரப்பை ஆக்கிரமித்து தன்னை ஓர் நாடாக அறிவித்துக் கொண்ட
இஸ்ரேலை தவிர, உலகிலுள்ள அனைத்து நாடுகளையும்
சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள்
சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக
செல்வார்கள்.

 

அவ்வாறு அவர்கள் வேலை செய்யும்
போது அவர்களுடன்
இணைந்து பணியாற்றும்
இஸ்லாமியர்களின் நல்லொழுக்கம்,
இறை நம்பிக்கை, நேர்மை, சமத்துவம்,
மனிதனை மனிதனாக மதிக்கும்
தன்மை ஆகியவற்றை பார்க்கும் பிறமத சகோதரர்கள் இஸ்லாத்தின் பால்
ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவுவார்கள்.

 

அப்படி தழுவியவர்கள் தான் இந்த 4219 நபர்களும்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்வியல்
நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதர சகோதரிகளுக்கு இறைவன் மறுமையிலும்,
இம்மையிலும் நல்
வாழ்வை ஏற்படுத்துவானாக….

 

தகவல் -முகநூல் முஸ்லிம் மீடியா

Web Design by Srilanka Muslims Web Team