சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரினால் சிட்டி கேம்பஸ். - Sri Lanka Muslim

சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரினால் சிட்டி கேம்பஸ்.

Contributors

 

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி-அல்-மனார் நிறுவனத்தின் சமூக சேவையின் மற்றுமொறு படிக்கல்லாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரைக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் தனி ஒரு பிரிவாக வாழ்க்கைக்கு தொழில் ,தொழிலுக்கு செய்திறன் எனும் தொனியில் பல்வேறு கணணி தொழிற் பயிற்சி நெறிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிட்டி கெம்பஸ் திறப்பு விழா 10-12-2013 இன்று செவ்வாய்க்கிழமை அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் சிட்டி கெம்பஸ் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,மட்டு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ,காத்தான்குடி பளிளவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.அஹமட் லெப்வை ,உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

arab uni1

arab uni3

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team