சவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி - Sri Lanka Muslim

சவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 முஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்த செய்தி அப்பட்டமான பொய் பிரசாரமாகும்!

-கலீல் எஸ். முஹம்மட்-


சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்துவிட்டதாகவும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும் வெளிவந்துள்ள காணொளி செய்தி அப்பட்டமான பொய் பிரசாரமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஸவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகரும் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;

சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரை நல்லடக்கம் செய்வதாகவும் புதியதோர் புரளியை கிழப்பி விட்டுள்ளனர். இது சவூதியின் அன்றாட நடவடிக்கைகளில் பின்னடைவை உண்டுபண்ணலாம் என சதி செய்வோரின் கபடத்தனமான கிழ்த்தரமான முயற்சியாகும்.

இதன் பின்னணியில் இஸ்லாமிய விரோதிகளான ஷீயாக்கள் உள்ளனர் என்பது உலகறிந்த உண்மையாகும். இவர்களது நோக்கமெல்லாம் சவூதியின் இஸ்தீர தன்மையை குழப்புவதாகும். ஷீயாக்களோடு இஸ்லாத்திற்கு விரோதமா இரு முஸ்லிம் நாடுகளும் கூட்டுக்கு இணைந்துள்ளன.

புனித மக்கமா நகரை தங்கள் பிடியில் கைப்பற்ற நீண்ட கால திட்டமிடலில் மேற்கொள்ளும் சதியாகும். அத்துடன் சவூதி மக்களை குழப்பி அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்த முனைகின்றனர்.

ஏற்கனவே ஈராக், எகிப்து உட்பட பலநாடுகளை இந்த சதிக்குள் சிக்கவைத்துள்ளனர். ஊடகங்கள் சமூக வலைதளங்கள் ஊடாக பொய்களை பரப்பி மக்களை ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் சிக்கவைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

தான் புதிய இளவரசர் பொறுப்பை ஏற்றதிலிருந்து மிகவும் காத்திரமாக திட்டமிடப்பட்ட அடிப்படையில்முஹம்மத் பின் ஸல்மான் செயல்பட்டுவருகிறார். கடந்த சில வாரங்களாக மரணமடைந்ததாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய முன்தினம் யெமென் தேசத்தின் தலைவர் அப்துல் றப்பு அல் மன்சூர் அல் ஹாதி அவர்களுடனான சந்திப்பு சவூதி றோயல் பலேஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அத்துடன் சவூதி அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெறுகிறது.

எனவே இந்த பொய்யானவதந்திகளை கண்டு ஏமாற வேண்டாம். இலங்கையிலும் இவ்வாறான தகவல்களை சமூகவலைதளம் மூலம் பரப்புகின்றனர்.

உண்மையை கண்டறியாமல் புனிதமான நோன்பு காலம் என்றும் பாராது பொய்யொன்று கிடைத்ததும் அது குறித்து எந்த ஆராய்வும் இல்லாமல் மறுபிரசுரம் செய்கிறார்கள்.

சவூதியின் புனிதத்தை துவம்சம் செய்து இஸ்லாமிய விரோதத்தை மக்கள் மத்தியில் சூட்சுமமாக திணித்து தங்கள் சொந்த நலனில் வெற்றிகாண ஆரம்பித்துள்ள இந்த சதி முயற்சி முறியடிக்கப்படல் வேண்டும். இது குறித்து இலங்கை முஸ்லிம்களும் சவூதியில் தொழில் புரியும் இலங்கையர்களும் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

( படத்தில் யெமன் தேசத்தின் தலைவர் அப்துல் றப்பு அல் மன்சூர் அல் ஹாதி மற்றும் சவூதி இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான்)

IMG-20180603-WA0037

Web Design by Srilanka Muslims Web Team