சவூதி பொதுமன்னிப்பு; மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு! - Sri Lanka Muslim

சவூதி பொதுமன்னிப்பு; மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேறும் கால அவகாசத்தை ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சவூதி நியூஸ் ஏஜென்சியை குறிக்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற மூன்று மாத பொது மன்னிப்பு காலத்தை ஏற்கனவே வழங்கியிருந்தது. இந்த பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதகாலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் வீசா அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள், சவூதி அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தில் வெளிநாட்டவர்கள் தமது நாட்டின் தூதரகங்களின் உதவியுடன் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team