சவூதி பொலிஸாருடன் வெளிநாட்டு தொழிலாளர் மோதல்; இருவர் பலி - Sri Lanka Muslim

சவூதி பொலிஸாருடன் வெளிநாட்டு தொழிலாளர் மோதல்; இருவர் பலி

Contributors

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் பொலிஸாருக்கும் வெளிநாட்டு தொழிலாளர் களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லட்டதோடு பலர் காயமடைந்தனர்.

சட்டவிரோத வெளிநாட்ட தொழிலாளர்களை பிடிக்கும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒருவாரத்தை எட்டும் நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்த மோதல் ஏற்பட்டது. மன்புஹாஹ் பகுதியில் கூடிய வெளிநாட்டினரை கலைக்க பாதுகாப்பு படையினர் வானை நோக்கி சுட்டதோடு தடியடி பிரயோகமும் மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு கூடியோர் பொலிஸார் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் சவூதி நாட்டவர் என்றும் அடுத்தவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் சவூதி பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த மோதலில் ஈடுபட்ட வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க நாட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.-TC

Web Design by Srilanka Muslims Web Team