சஹரானின் மனைவி உட்பட ஐவருக்கு இம்மாதம் 21 வரை விளக்கமறியல்!

Read Time:1 Minute, 11 Second

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட ஆறு பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காடியா, 2019 ஏப்ரலில் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 6 பேரையும் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆய்வு செய்த பின்னர் அவர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Previous post டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர பிரசன்னவின் மற்றுமொரு திட்டம்!
Next post கொள்கை இல்லாத தெற்கு கூட்டணிகள்!