'சஹ்ரான் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் பொறுப்பில் இல்லை' - பொலிஸ் ஊடகப்பிரிவு! - Sri Lanka Muslim

‘சஹ்ரான் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் பொறுப்பில் இல்லை’ – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தற்கொலைதாரியான சஹரான் ஹசீமால் பயன்படுத்தப்பட்ட வாகனம், பொலிஸார் பொறுப்பின் கீழ் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சஹ்ரானின் வாகனம் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவால் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில், இன்று ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொள்ளுப்பிட்டி சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் ஹில்சாப் அஹமட் பயன்படுத்திய WPCAS  1411 என்ற இலக்கத்தையுடைய வாகனமே குற்ற விசாரணை திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனமானது, 2019.05.13ஆம் திகதி 2123/3 என்ற இலக்கத்தின் அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய அரசுடமையாக்கப்பட்டு, இலங்கை பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team