சாதனை படைத்த டோனி - Sri Lanka Muslim
Contributors

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, ஒருநாள் போட்டியில் 50வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதில் இந்திய அணியின் சொதப்பல் பந்துவீச்சால், 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய அணியின் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டோனி, நேற்று அணித்தலைவராக தனது 150வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 150 போட்டிகள் அல்லது அதற்கு மேல் அணித்தலைவராக செயல்பட்ட 7வது சர்வதேச வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதுவரை 150 ஒருநாள் போட்டிகளுக்கு அணித்தலைவராக இருந்த டோனி, 87 வெற்றி, 51 தோல்வியை பதிவு செய்தார். மூன்று போட்டிகள் டை ஆனது. ஒன்பது போட்டிகளுக்கு முடிவு இல்லை.

Web Design by Srilanka Muslims Web Team