சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - Sri Lanka Muslim

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

Contributors

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதி வரை 76 பாடசாலைகளில் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார கூறியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை 19 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகளில் 40,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

122 நிலையங்களில் 1842 மதிப்பீ்ட்டுக் குழுக்கள் மொத்தமாக 110 இலட்சம் விடைத்தாள்களை  மதிப்பீடு  செய்யவுள்ளன.(nf)

Web Design by Srilanka Muslims Web Team