சாதாரண தர பரீட்சை டிசம்பர் 10இல்! - Sri Lanka Muslim
Contributors

இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி  தொடக்கம் 20ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த முறை 5 லட்சத்து 78 ஆயிரத்து 140 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றுவது இதுவே முதல் முறை.
கடந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை விட, இந்த முறை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாக ஆணையார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தமுறை 4 ஆயிரத்து 312 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team