சாப்பாட்டில் பல்லி மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிசாலையை பொதுசுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைப்பு..! - Sri Lanka Muslim

சாப்பாட்டில் பல்லி மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிசாலையை பொதுசுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைப்பு..!

Contributors
author image

Editorial Team

(திருக்கோவில் நிருபர்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டமை சம்பவம் தொடர்பாக 1சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டதையடுத்து உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் சிற்றுண்டிச்சாலையை மூடி சீல் வைத்தனர்.

குறித்த வைத்தியசாலையில் இயங்கிவரும் சிற்றுண்டிச்சாலையில் சம்பவதினமான நேற்று வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர் பணம் செலுத்தி மதிய உணவை வாங்கி சாப்பிட பார்சலை விரித்தபோது அந்த உணவில் பல்லி இருப்பதைக் கண்டு உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முiறையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்தி வருபவருக்கு எதிராக மட்க்களப்பு நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை உணவு சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்ட நிலையில் குறித்த சிற்றுண்டிச்சாலையை மூடி சீல் வைக்குமாறும் இந்த சிற்றுண்டிச்சாலையை தற்போது ஒப்பந்தத்தில் நடாத்தி வருபவரின் ஒப்பந்தத்தை நிறுத்தி வேறு நபருக்கு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறி தலைமையிலான பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் இன்று உடனடியாக சிற்றுண்டிச்சாலையை மூடி சீல் வைத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team