சாய்ந்தமருதில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை! - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை!

Contributors

யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில்  இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (13) இடம்பெற்றது.

இதில் பிரதான வளவாளராகவும் இந்நிகழ்சித் திட்டத்தின் பிராதானியான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் எம்.ஏ.சஜா கலந்து கொண்டதுடன் அமைப்பின் தலைவர் இஷட்.எம்.ஸாஜீத் மற்றும் செயலாளார் சரோத் சுஜா மற்றும் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளாருமான ஏ.எல்.எம் சலீம், விஷேட அதிதி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக், கௌரவ அதிதிகளாக முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகத்தர் நௌஷாட் ஏ.ஜப்பார், ஐ.நா. அபிவிருத்தி திட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.எப்.ஸாமிர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட சிரேஷ்ட விரிவுரையாளர்களான பொறியியலாளர் எம்.என்.ஏ.ஹினாஸ், பொறியியலாளர் என்.டி.எம்.சாஜித், அறிவிப்பாளர் ரொஷான் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இப்பயிற்சிப் பட்டறையில் பல்வேறு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

பாறுக் ஷிஹான்

Web Design by Srilanka Muslims Web Team