சாய்ந்தமருதில் "யாவருக்கும் மின்சாரம்" இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் “யாவருக்கும் மின்சாரம்” இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் ” யாவருக்கும் மின்சாரம் “ திட்டத்தினால் இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல், சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல்.ஏ.ஜூனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ.கபூர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் 163 குடும்பங்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 38 லட்சம் நிதியில் இலவச மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டன .

Web Design by Srilanka Muslims Web Team