சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்திற்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் - Sri Lanka Muslim

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்திற்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம்

Contributors

 

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்திற்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோரிடம் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கையின் பேரில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்திற்கு நேரடியாக விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்தார்.

பாடசாலை அதிபர் எம்.எம்.முஜீம் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோருடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம், ஓய்வு பெற்ற அதிபர்களான ஐ.எல்.ஏ.மஜீத், ஏ.பீர் முஹம்மட், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியேக செயலாளர்களான எம்.ஐ.எம்.பாஸி, சி.எம்.ஏ.முனாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team