சாய்ந்தமருது சற்குரு மகாமின் வருடாந்த மௌலித் மஜ்லிஸும், கொடியேற்றமும்..! - Sri Lanka Muslim

சாய்ந்தமருது சற்குரு மகாமின் வருடாந்த மௌலித் மஜ்லிஸும், கொடியேற்றமும்..!

Contributors

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)

அல் மதாத் யா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நினைவாக வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவில் நடைபெறும் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும் இம்முறையும் இன்று (11) மாலை சாய்ந்தமருது சற்குரு மகாம் தலைவர் எம்.எம்.எ.ஜப்பார் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

வழமையாக வெகுவிமர்சையாக நடைபெறும் இந்நிகழ்வு இம்முறை கொரோனோ தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பேணி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் நிகழ்வின் பிரதம அதிதி அஸ்ஸெய்யித் மக்கத்தார் அப்துல் மஜீத் கலீபத்துல் ஹல்லாஜ் அவர்களினால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு மகாம் செயலாளர் ஏ.சி.எம்.நிஸார், பொருளாளர் எம்.எம். பஸ்மீர், உட்பட நிர்வாகிகள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team