சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மாநகர சபை ? - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மாநகர சபை ?

Contributors

(நமது அரசியல் நிரூபர்)

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு என தனியான மாநகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு என தலா இரண்டு வருட அடிப்படையில் மேயர் பதவி முஸ்லிம் காங்கிரஸால் வழங்கப்பட்டுள்ளன.  இதில் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிப் என்பவருக்கு முதல் இருவருட காலம் மேயர் பதவி வகிக்க நியமிக்கபட்டிருந்தார்.

மீதம் உள்ள இரண்டு வருடங்களுக்கு நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட வேண்டும் என கல்முனை மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  நீண்டகாலமாக அரசியல் தலைமைப் பீடமாக கல்முனைப் பிரதேசம் விளங்குகின்றமையால் வாக்குகளுக்காக மட்டும் பயன்படுத்தப்ட்டு வந்த சாய்ந்தமருது பிரதேச மக்கள் தங்களுக்கு கிடைத்த மேயர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இதன்காரணமாக முஸ்லிம் காங்கிரசுக்கும் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைய தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது மேயர் பதவியை தக்க வைத்துக் கொள்ள சிராஸ் மீராசாகிப் முனைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான அரசியல் சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு அரசயில் வாதிகளும் தமக்கு சாதகமாக காய்நகர்த்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அக்கரைப்பற்று மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நன்கு மக்கள் செல்வாக்குள்ள ஒரு அமைச்சர் தனக்கு கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்கள் அதிக ஆதரவு இன்றி இருப்பதை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான்  தற்போது ஏற்பட்டுள்ள மேயர் பதவி தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மாநகர சபையை அமைத்து கொடுத்தால் அது அப்பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதோடு தனது அரசியல் எதிர்காலத்திற்கு கைகொடுக்கும் என்று இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team