சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு - நிசாம் காரியப்பர் - Sri Lanka Muslim

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு – நிசாம் காரியப்பர்

Contributors

 

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சாய்ந்தமருது கரைவாகு வயல் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பொலிவேரியன் புதிய கிராமத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (06) காலை அங்கு நேரடியாக விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடிய போதே முதல்வர் நிசாம் காரியப்பர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள், ஆற்று நீர் சீரான ஓட்டமினமையால் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம், யானைகளின் அச்சுறுத்தல், நடை பாதையில் மாடுகள் அறுக்கப்படும் முறையற்ற செயற்பாடு உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் இப்பிரச்சினைகளை முடியானவரை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முதல்வர் பணித்ததுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த விஜயத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் முதல்வரின் பிரத்தியேகச் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team