சிங்­கள பெளத்த நாட்டில், உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது? - Sri Lanka Muslim

சிங்­கள பெளத்த நாட்டில், உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது?

Contributors

(vi) ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது? ஹலாலை முழு­மை­யாக சுருட்டிக் கொள்­ளா­விட்டால் அதற்­கெ­தி­ரான போராட்டம் தொடரும் என பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

சிங்­கள பெளத்­தர்­க­ளுக்கு ஹலால் உண­வு­களை திணிப்­ப­தற்கு இட­ம­ளிக்கப் போவ­தில்­லை­யென்றும் தேரர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பெளத்த மத குரு­மா­ரு­டனும் இலங்கை வர்த்­தகச் சம்­மே­ள­னத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு இணக்கம் காணப்­பட்டே உணவுப் பொருட்­க­ளுக்கு (விரும்­பு­ப­வர்­க­ளுக்கு) ஹலால் சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வ­தாக ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

இந்த உலமா சபை சில பெளத்த குரு­மாரை ஏமாற்றி சூட்­சு­ம­மாக ஹலால் உண­வு­களை சிங்­கள பெளத்­தர்­க­ளுக்கு உண்ணக் கொடுக்­கின்­றது.

உலமா சபை ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வதை கைவி­டு­வ­தாகத் தான் உறுதி வழங்­கி­யி­ருந்­தது. ஆனால் இன்று புதுக் கதையை கூறு­கின்­றது. அத்­தோடு இலங்கை சிங்­கள பெளத்த நாடு. இங்கு உலமா சபைக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை யார் கொடுத்­தது. உலமா சபை­யினர் யார். எனவே எம்மை தொடர்ந்து ஏமாற்ற முடி­யாது. ஹலா­லுக்கு எதி­ராக சிங்­கள மக்­களை தெளி­வு­ப­டுத்த கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்கு நாம் நடத்­திய வாகன எதிர்ப்பு ஆர்ப்­பாட்டப் பேரணி வெற்றி பெற்­றுள்­ளது.

Web Design by Srilanka Muslims Web Team