சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் - ஞானசார தேரர்..! - Sri Lanka Muslim

சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் – ஞானசார தேரர்..!

Contributors

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலகில் மததீவிரவாதம் உட்பட பல வகையான தீவிரவாதங்கள் காணப்படுகின்ற போதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் மிகவும் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த தீவிரவாதத்தின் விளைவுகளும்- பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமே மிகவும் பயங்கரமானது காட்டுமிராண்டித்தனமானது ஏனைய தீவிரவாதங்கள் இதற்கு அருகில் நெருங்ககூட முடியாது மனிதர்கள் நூற்றாண்டுகளாக சாதித்த விழுமியங்களை அது தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team