சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் அதி விஷேட புள்ளியுடன் International Human Rights Law சார்ந்த சட்ட முதுமாணி கற்கை நெறியை பூர்த்தி செய்தார்! - Sri Lanka Muslim

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் அதி விஷேட புள்ளியுடன் International Human Rights Law சார்ந்த சட்ட முதுமாணி கற்கை நெறியை பூர்த்தி செய்தார்!

Contributors

பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் IDM Nations Campus இன்டர்நேஷனல் ஊடாக, பிரித்தானிய Buckinghamshire New University பல்கலைக்கழகத்தில் அதிவிஷேட புள்ளியுடன் International Human Rights Law சார்ந்த சட்ட முதுமாணி (LLM International Human Rights Law) கற்கைநெறியை பூர்த்தி செய்தார்.

இக் கற்கைநெறிக்கு புத்தளம், கொழும்பு மெட்ரோ வேஸ்ட் சூழல் மாசடைவது தொடர்பான, மனித உரிமை சார்ந்த பிரச்சினை தொடர்பில், தனது ஆய்வு கட்டுரையாக பிரித்தானியா பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்து, அதில் விசேட புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை IDM Nations Campus International கல்வி நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி.வி.ஜனகன் பாராட்டி வழங்கி வைத்தார்.

சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் ஏற்கனவே இரண்டு முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team