சிறுமி ஆயிஷா கொலை; இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்! - Sri Lanka Muslim

சிறுமி ஆயிஷா கொலை; இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்!

Contributors

இதற்குப் பின்னர் இந்நாட்டில் இதேபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளது. குழந்தைகள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை இந்நாட்டில் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன அட்டுலுகமையைச் சேர்ந்த சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி எம்மை பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதோடு, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஜம்இய்யா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் அவசரமாக சட்டத்திற்கு முன் றுத்தப்பட வேண்டும் என்றும் குழந்தைகள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை இந்நாட்டில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐம்இய்யா உரிய அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் இதற்கு முன்னர் பல தடவைகள் நிகழ்ந்திருப்பதை நாம் அறிவோம். இது இறுதியானதாக அமைய வேண்டுமென்று நாம் பிரார்த்திப்பதோடு, இதற்குப் பின்னர் இந்நாட்டில் இதே போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இந்த சிறுமிக்கு அருள்பாலித்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஈருலகிலும் நலவுகளையும் இறைபொருத்தத்தையும் கொடுத்தருள்வானாக எனவும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team