சில அரசியல்வாதிகள் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் – - Sri Lanka Muslim

சில அரசியல்வாதிகள் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் –

Contributors

சில அரசியல்வாதிகள் பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வுகளை பணம் சம்பாதிப்பதற்கான வழியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. சில அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் பொதுநவலாய நாடுகள் தலைவர்கள் அமர்வு ஏற்பாட்டுப் பணிகளில் பாரியளவில் தரகுப் பணத்தைப் சம்பாதித்துக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுமக்களின் பணமே இவ்வாறு விரயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒரு சில அரசியல்வாதிகள் பாரியளவில் பணத்தைச் செலவிட்டு வருவதாகவும் இதன் பிரதிகூலங்களை பொதுமக்களே எதிர்நோக்க நேரிடும் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பு நகர் முழுவதிலும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்காக சிறிய மற்றும் பெரிய விசிறிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரிய விசிறிகளுக்கு 15000 ரூபாவும், சிறிய விசிறிகளுக்கு 7000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரியளவில் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வாகனங்கள் அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சொகுசு வாகனங்களை கைப்பற்றிக் கொள்வதில் அமைச்சர்களுக்கு இடையில் போட்டி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளுக்கான பொருளாதார சுமையை சாதாரண பொதுமக்கள் ஏற்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.gt

Web Design by Srilanka Muslims Web Team