சில இலங்கை தொழிலாளர்கள் சவுதி ஜித்தாவில் நிர்க்கதியான நிலையில் - Sri Lanka Muslim

சில இலங்கை தொழிலாளர்கள் சவுதி ஜித்தாவில் நிர்க்கதியான நிலையில்

Contributors

(M NEWS)

இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்ற இலங்கையர்கள் சிலர் ஜித்தா நகரில் நிர்க்கதியாகியுள்ளனர்.ஜித்தா வுக்கு கடந்த 15 ஆம் திகதி சென்ற இவர்கள் எவ்வித வசதியும் அற்ற அறையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக உணவைப் பெற்றுக்கொள்வதிலும் தாம் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஜித்தா நகரில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களில் சிலர் தெரிவித்ததாக சவூதி அரேபிய ஜித்தா நகரில் இருந்து ஜனாப் முஸம்மில்  தெரிவித்தார்.

தமது வேலைவாய்ப்பு முகவர் உரிய தொழில்களை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தாகவும்  ஜனாப் முஸம்மில்  தெரிவித்தார்.

இலங்கை பணியாளர்களின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொதுமுகாமையாளருமான மங்களரன் தெனியவிடம் வினவியபோது, உரிய நடைமுறைக்கு மாறாக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்பவர்களே சிரமத்தை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டினார்.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான தொழில் உடன்படிக்கை ஒன்றை செயற்படுத்தும்போது உரிய நடைமுறைப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ளவர்களை அவர்களது உறவினர்களே மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

Web Design by Srilanka Muslims Web Team