சீனாவின் தரமற்ற பசளையை கொள்வனவு செய்ய முற்பட்டதால் இலங்கை அடைந்த நஷ்டம் அதிகம்! - Sri Lanka Muslim

சீனாவின் தரமற்ற பசளையை கொள்வனவு செய்ய முற்பட்டதால் இலங்கை அடைந்த நஷ்டம் அதிகம்!

Contributors

சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளன. சீனாவின் உரம் தரமற்றதெனத் தெரிவிக்கப்பட்டு அந்நாட்டுக்ேக திரும்பிச் சென்ற போதிலும், அதனால் இலங்கைக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன.

சீனாவில் இருந்து இலங்கைக்கு உரத்தை இறக்குமதி செய்து 69 இலட்சம் டொலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்து விட்டதாக அவ்வேளையில் ஆட்சியிலிருந்த ஒருசிலர் மீது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

சீன நிறுவனத்தின் உரத்தின் மாதிரிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. அவை தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

சீனாவின் உர வழங்குநரான, கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 20,550 மெட்ரிக் தொன் உரத்தை கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பியிருந்தது. அந்த உரம் தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி நுண்ணுயிர் தொற்றுநீக்கம் செய்யப்படாததால், அதனை இலங்கையில் தரையிறக்குவதில் நீண்ட நாள் சர்ச்சை நிலவியது.

அந்த இழுபறியின் பின்னர் உரத்தை இறக்குமதி செய்த இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி என்பன சீன நிறுவனத்துக்கு பணம் வழங்க மறுத்ததோடு கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து கொடுப்பனவை நிறுத்துவதற்கான உத்தரவைப் பெற்றிருந்தன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவிலும் நெருடலை ஏற்படுத்தியிருந்தது. சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண்தற்கு அமைச்சரவையின் அங்கீகரிக்காரத்துக்கமைய, கப்பலில் உள்ள உரத்தில் 75% இருப்புக்கான கட்டணமாக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டது

அதன்படி, தேவையான கலவை மற்றும் தரம் கொண்ட உரங்களை அதே நிபந்தனைகளின்படி மீண்டும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்புடைய வழக்கு மீளப்பெறப்பட்டது.

எனினும், இதுவரையில் இலங்கைக்கு எதிர்பார்த்த தரமான உரம் எதுவும் சீனா நிறுவனத்தினால் அனுப்பப்படவில்லை. இதனால் உரத்துக்காக செலுத்தும் தொகை காரணமாக அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அத்தொகையை வசூலிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய அந்த உரக்கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட். கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து 20,000 ெதான் இயற்கை உரங்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி அக்கப்பல் புறப்பட்டது.

இலங்கையை இயற்கை விவசாய நாடாக மாற்றும் நோக்கில் அனைத்து இரசாயன உர இறக்குமதிகளையும் அரசு நிறுத்தியிருந்ததால், இத்தகைய இயற்கை உர இறக்குமதி இலங்கைக்குத் தேவைப்பட்டது.

‘பிரச்சினை உரத்தின் தரத்தில் உள்ளது. இது பயிர்கள் செழித்து வளர உதவுவதற்குப் பதிலாக அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று விஞ்ஞானிகள் கூறுயுள்ளனர்.

“சீன உரம் கிருமிகள் நீக்கப்பட்டதல்ல என்பது உரமாதிரிகள் மீதான எங்கள் சோதனைகள் மூலம் தெரியவந்தது” என்று இலங்கை விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“கரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை நாங்கள் கண்டறிந்தோம்” என்கிறார் விஞ்ஞானி ஒருவர்.

ஒக்டோபர் மாத பிற்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரிகள் ஹிப்போ ஸ்பிரிட் கப்பலின் பொருட்களை இறக்குவதற்கு அனுமதி மறுத்தபோது, அக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு நகர்ந்து சென்றது.

ஆசியாவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு பல பில்லியன் அமெரிக்க ​ெடாலர்களை சீனா கடனாக வழங்கியிருக்கிறது. இருப்பினும் எல்லா நிதியுதவியும் இலங்கைக்கு சாதகமாக இருக்கவில்லை.

உதாரணத்துக்கு, 2017 ஆம் ஆண்டில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்புவதற்காக வாங்கிய கடனை அடைக்க இலங்கை திணறியபோது, அதன் பெரும்பகுதியை சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது.

ஆனால், என்னதான் சீனா பொருளாரத்தில் வலிமையாக இருந்தாலும், விதிமுறைகளை மீறும் எந்த இயற்கை உரமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதற்கு சீன உர விவகாரம் நல்லதொரு உதாரணமாகும்.

“வேறொரு தொகுதியிலிருந்து புதிய மாதிரிகளை அனுப்புமாறு சீன நிறுவனத்திடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். புதிதாக அனுப்பப்படும் மாதிரி தரப் பரிசோதனையைக் கடந்துவிட்டால், அவர்கள் புதிய உரத் தொகுதியை அனுப்பலாம்” என்று அரசாங்க தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team