சீனாவின் முஸ்லிம் மாகாணத்தில் வன்முறை: 16 பேர் பலி - Sri Lanka Muslim

சீனாவின் முஸ்லிம் மாகாணத்தில் வன்முறை: 16 பேர் பலி

Contributors

சீனாவின் மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், 14 பேரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு.

ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே பொலிசார் கைது செய்ய முயன்ற போது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team