சீன நிறுவனங்களின் உரங்களுத் தடை - அரசாங்கம் வழங்கியுள்ள பதில்..! - Sri Lanka Muslim

சீன நிறுவனங்களின் உரங்களுத் தடை – அரசாங்கம் வழங்கியுள்ள பதில்..!

Contributors
author image

Editorial Team

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும (Dullas Alagapruma) தெரிவித்துள்ளார். அமைச்சரவைத தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியும். எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் அதுதான் ஜனநாயகம். எவ்வாறாயினும், இந்த விடயம் இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்றும் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team